என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயிலாடுதுறை ரெயில் நிலையம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
    X
    மயிலாடுதுறை ரெயில் நிலையம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

    ரெயில் சலுகைகளை மீண்டும் வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

    ரெயில் சலுகைகளை மீண்டும் வழங்கக்கோரி மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை ரெயில் நிலையம் முன்பு மாற்றுத்திறனாளிகளுக்கு ரெயில் சலுகைகளை மீண்டும் வழங்கக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு அதன் மாவட்ட செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் அருள்மணி, தாமரைச்செல்வி, ராமச்சந்திரன், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரெயில் சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு மானிய விலையில் பெட்ரோல் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ரெயில் பெட்டிகளை அனைத்து ரெயில்களிலும் உடனே இணைக்க வேண்டும்.

    ரெயில் நிலைய பிளாட்பார டிக்கெட் விலையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    இதில் நிர்வாகிகள் ஆனந்தராஜ், சண்முகம், கமலநாதன், நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×