search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காலண்டர்
    X
    காலண்டர்

    இந்த ஆண்டு 14 வகையான காலண்டர்கள் தயாரிக்க முடிவு- சிவகாசி உற்பத்தியாளர் தகவல்

    கடந்த 6 மாதங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு காலண்டர்கள் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளது.
    சிவகாசி:

    சிவகாசி பகுதியில் உள்ள காலண்டர் உற்பத்தியாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆடி-18-ந் தேதியன்று புதிய டிசைன்களை வெளியிட்டு வெளியூர் வியாபாரிகளிடம் இருந்து ஆர்டர்கள் பெறுவது வழக்கம். இந்தநிலையில் நேற்று சிவகாசியில் உள்ள முக்கிய காலண்டர்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் புதிய வகை காலண்டர்கள் அறிமுக விழா மற்றும் ஆர்டர் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வெளியூர் வியாபாரிகள் கலந்து கொண்டு புதிய வகை காலண்டர்களுக்கு ஆர்டர் கொடுத்தனர்.

    காலண்டர்கள் உற்பத்தி குறித்தும், விலை உயர்வு குறித்தும் கற்பகா ஜெய்சங்கர் கூறியதாவது:-

    கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வர வேண்டிய காகிதம் மற்றும் அட்டைகள் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த 6 மாதங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு காலண்டர்கள் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. அதனால் 2021-ம் ஆண்டு காலண்டர்கள் விற்பனை செய்யப்பட்ட விலையை விட 20 முதல் 25 சதவீதம் வரை விலை உயர வாய்ப்பு உள்ளது.

    கொரோனாவின் தாக்கம் மற்ற நாடுகளில் தற்போது அதிகரித்து வருவதால் மூலப்பொருட்கள் வருகை இன்னும் பாதிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இனிவரும் காலங்களில் மூலப்பொருட்களில் விலை இன்னும் உயரவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் காலண்டர்கள் விலை இந்த ஆண்டு 25 சதவீதம் வரை நிச்சயம் உயர்த்தப்பட வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் உள்ளோம். இந்த ஆண்டு தற்போது வரை 14 வகையான காலண்டர்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் அவர்கள் தரும் புதிய ஆர்டர்களையும் செய்து கொடுக்க தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×