என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வில்லியனூர் அருகே பாம்பு கடித்து பெண் பலி

    வில்லியனூர் அருகே பாம்பு கடித்ததில் பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே ராமநாதபுரம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் மங்காவரம் (வயது42). இவர் தனது மகன் பார்த்தீபன் மற்றும் மருமகள் சாவித்ரி ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார்.

    மங்காவரமும் அவரது மகன் பார்த்தீபனும் விவசாய கூலி வேலை செய்து வந்தனர். அதுபோல் சம்பவத்தன்று இருவரும் கூலி வேலை செய்து விட்டு மாலை வீடு திரும்பினர். இரவு பார்த்தீபன் சாப்பிட்டு விட்டு தனது மனைவியுடன் வீட்டின் ஒரு அறையிலும், மங்காவரம் மற்றொரு அறையிலும் தூங்கினர்.

    நள்ளிரவு 2 மணியளவில் மங்காவரம் தன்னை வி‌ஷபாம்பு ஏதோ கடித்து விட்டதாக தனது மகனிடம் தெரிவித்தார்.

    இதனைகேட்டு அதிர்ச்சியடைந்த பார்த்தீபன் உடனடியாக தனது தாயை இரு சக்கர வாகனத்தில் அருகில் உள்ள ஜிப்மர் கிளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்தபின்பு கோரிமேடு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் மங்காவரத்தை அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த மங்காவரம் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது மகன் பார்த்தீபன் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×