என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
    X
    கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

    ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ள தமிழக வீரர்கள், வீராங்கனைகளுக்கு கவர்னர் தமிழிசை வாழ்த்து

    ஒலிம்பிக் தடகள போட்டிகளில் தமிழக வீரர்கள், வீராங்கனைகள் 5 பேர் தேர்வாகியுள்ள நிலையில் அவர்களுக்கு புதுவை கவர்னர் தமிழிசை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் வருகிற 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளது.

    இதில் பங்கேற்க இந்திய வீரர்கள், வீராங்கனைகள் தகுதித்தேர்வின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். தடகள போட்டிகளில் தமிழக வீரர்கள், வீராங்கனைகள் 5 பேர் தேர்வாகியுள்ளனர். அவர்களுக்கு புதுவை கவர்னர் தமிழிசை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், டோக்கியோ ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில் 4*400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பங்கேற்கும் தமிழகத்தை சேர்ந்த தடகள வீராங்கனைகள் தனலட்சுமி, ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன் மற்றும் தடகள வீரர்கள் ஆரோக்கிய ராஜிவ், நாகநாதன் பாண்டி ஆகியோர் பதக்கம் வென்று நம் இந்திய மண்ணிற்கு பெருமை சேர்க்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×