search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    புதுச்சேரியில் புதிதாக 128 பேருக்கு தொற்று - கொரோனாவுக்கு முதியவர் பலி

    புதுச்சேரியில் புதிதாக 128 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனாவுக்கு மேலும் ஒரு முதியவர் பலியானார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 597 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 128 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 87 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 283 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 1,588 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதாவது 1,871 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 262 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    புதுச்சேரியில் இதுவரை 13 லட்சத்து 47ஆயிரத்து 419 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 11 லட்சத்து 57 ஆயிரத்து 6 பேருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. புதுவையில் கொரோனாவுக்கு நேற்று முதியவர் ஒருவர் பலியானார். அதாவது கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த ரெட்டியார்பாளையம் சுதாகர் நகரை சேர்ந்த 89 வயது முதியவர் பலியானார். இதனால் பலியானோர் எண்ணிக்கை 1,762 ஆக உயர்ந்துள்ளது.

    புதுவையில் தற்போது உயிரிழப்பு 1.49 சதவீதமாகவும், குணமடைந்தோர் 96.92 சதவீதமாகவும் உள்ளது. நேற்று சுகாதார பணியாளர்கள் 5 பேரும், பொதுமக்கள் 1,450 பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். மாநிலத்தில் இதுவரை 5 லட்சத்து 28 ஆயிரத்து 360 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×