search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பாகூர் அருகே கடன் வாங்கி மது குடித்ததை மனைவி கண்டித்ததால் அரசு ஆஸ்பத்திரி ஊழியர் தற்கொலை தற்கொலை

    பாகூர் அருகே கடன் வாங்கி மது குடித்ததை மனைவி கண்டித்ததால் அரசு ஆஸ்பத்திரி ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பாகூர்:

    பாகூர் அருகே அரங்கனூர் தாமரைக்குளம் வீதியை சேர்ந்தவர் கதிர்வேலு. இவர் புதுவை அரசு காசநோய் ஆஸ்பத்திரியில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு சுந்தர வள்ளி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    கதிர்வேலுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் பலரிடம் பணம் கடன் வாங்கி மது குடித்து வந்தார். இதனை அவரது மனைவி சுந்தரவள்ளி கண்டித்து வந்தார்.

    அதுபோல் கடந்த 3 நாட்களாக கதிர்வேல் பலரிடம் பணம் கடன் வாங்கி அளவுக்கு அதிகமாக மதுகுடித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கதிர்வேல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த போது அவரை சுந்தரவள்ளி கண்டித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த கதிர்வேலு தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் கதிர்வேலு வீட்டின் கூரையில் மாடு கட்டும் கயிற்றால் தூக்கில் தொங்கினார்.

    திடீரென நள்ளிரவு சுந்தரவள்ளி எழுந்து பார்த்த போது கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே கதிர்வேலு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மனைவி சுந்தரவள்ளி கொடுத்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    Next Story
    ×