search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மேலும் 430 பேருக்கு கொரோனா பாதிப்பு - பலி எண்ணிக்கை 1700-ஐ தாண்டியது

    புதுச்சேரியில் ஒரே நாளில் 6 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,702 ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 190 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 430 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 13 ஆயிரத்து 672 ஆக உயர்ந்துள்ளது.

    இவர்களில் 597 பேர் குணமடைந்தனர். தற்போது 695 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 3 ஆயிரத்து 800 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 6 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,702 ஆக உயர்ந்துள்ளது.

    அதாவது ஜிப்மரில் நல்லூரை சேர்ந்த 58 வயது ஆண், தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வில்லியனூரை சேர்ந்த 40 வயது ஆண், கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நைனியப்பபிள்ளை வீதியை சேர்ந்த 58 வயது பெண், பூரணாங்குப்பத்தை சேர்ந்த 56 வயது ஆண், தர்மபுரியை சேர்ந்த 80 வயது முதியவர், ஏனாமில் 75 வயது முதியவர் ஆகியோர் பலியாகி உள்ளனர்.

    புதுவையில் உயிரிழப்பு 1.50 சதவீதமாகவும், குணமடைவது 94.55 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 111 பேரும், முன் களப்பணியாளர்கள் 11 பேரும், பொதுமக்கள் 5 ஆயிரத்து 740 பேரும் தடுப்பூசி போட்டுள்ளனர். இதுவரை 3 லட்சத்து 36 ஆயிரத்து 804 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×