search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேத்தூர் பகுதியில் தேங்காய் உரிக்கும் மற்றும் ரகங்கள் பிரிக்கும் பணிநடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    சேத்தூர் பகுதியில் தேங்காய் உரிக்கும் மற்றும் ரகங்கள் பிரிக்கும் பணிநடைபெற்ற போது எடுத்த படம்.

    தளவாய்புரம் பகுதியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு தேங்காய் ஏற்றுமதி

    தளவாய்புரம் பகுதியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    தளவாய்புரம்:

    தளவாய்புரம், சேத்தூர், முகவூர், சொக்கநாதன்புத்தூர், சிவகிரி, தேவதானம், சேத்தூர், சுந்தரராஜபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் எண்ணற்ற தென்னை மரங்கள் உள்ளன.

    இதனால் இங்கிருந்து வாரந்தோறும் வெளிமாநிலங்களுக்கு லாரி மூலம் தேங்காய்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. முகவூரில் 2 இடங்களிலும், சேத்தூரில் 2 இடங்களிலும் இந்த தேங்காய்களை உரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இதுபற்றி சேத்தூர் தேங்காய் வியாபாரி வேல்சாமி கூறியதாவது:-

    தளவாய்புரம், சேத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை மரங்கள் அதிகமாக இருப்பதால் நாங்கள் அங்கு சென்று விவசாயிகளிடம் ஒரு தேங்காயை ரூ.7 முதல் ரூ.8 வரை விலைபேசி பெற்று அதனை இங்கு கொண்டுவந்து உரித்து, நான்கு ரகமாக பிரித்து, மூட்டைகளாக போட்டு வெளிமாநிலங்களுக்கு லாரி மூலம் ஏற்றுமதி செய்கிறோம்.

    வாரத்தில் ஒரு நாள் மட்டும் 40,000 தேங்காய்கள் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது.

    இதில் ஒரு காய்க்கு எங்களுக்கு 50 பைசா முதல் ரூ.2 வரை வருமானம் கிடைக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×