என் மலர்

  செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  விருதுநகரில் கொரோனாவுக்கு 11 பேர் பலி - புதிதாக 1,016 பேருக்கு நோய் தொற்று

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 1,016 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்து 33 ஆக உயர்ந்துள்ளது.
  விருதுநகர்:

  விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 1,016 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்து 33 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 401 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களையும் சேர்த்து 27 ஆயிரத்து 83 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

  7 ஆயிரத்து 599 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். நோய் பாதிப்புக்கு மேலும் 11 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 372 ஆக உயர்ந்துள்ளது. இம்மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1,083 படுக்கைகள் உள்ள நிலையில் 979 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர்.

  இநத நிலையில் 104 படுக்கைகள் காலியாக உள்ளன. சிகிச்சை மையங்களில் 1,523 படுக்கைகள் உள்ள நிலையில் 934 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 589 படுக்கைகள் காலியாக உள்ளன.

  நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விருதுநகரில் முதலிப்பட்டி, வேலுச்சாமி நகர், அல்லம்பட்டி, ஆமத்தூர், சூலக்கரை மேடு, மாத்தி நாயக்கன்பட்டி, சாஸ்திரிநகர், ஆர்.ஆர்.நகர், மீசலூர் அரசு ஆஸ்பத்திரி, கே.கே.எஸ்.எஸ்.என். நகர், இந்திரா நகர், பெரியவள்ளிகுளம், லட்சுமி நகர், கூரைக்குண்டு, அண்ணாமலை தெரு, காந்திபுரம்தெரு, மொன்னிதெரு, நக்கீரர் தெரு, பாண்டியன் நகர், காந்திநகர், கட்டையாபுரம், குல்லூர்சந்தை அகதிகள் முகாம், பாண்டியன் நகர், முத்தால்நகர், துலுக்கப்பட்டி, ஒண்டிப்புலி, முத்துராமன்பட்டி, ஆனைகுழாய் தெரு ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

  மேலும் குரண்டி, பள்ளப்பட்டி, மல்லாங்கிணறு, முடியனூர், உலக்குடி, வேளநேரி, முக்குளம், கருவாக்குடி, புல்வாய்க்கரை, கடம்பங்குளம், மினாக்குளம், அகத்தாக்குளம், பாலையம்பட்டி, சிவகாசி, வன்னியம்பட்டி, மாரனேரி, வத்திராயிருப்பு, கரிசல்குளம், கேத்தநாயக்கன்பட்டி, புலிக்குறிச்சி, உசிலம்பட்டி, அழகாபுரி, சவ்வாசுபுரம், தும்முசின்னம்பட்டி, தொப்பலாக்கரை, அருப்புக்கோட்டை, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வெம்பக்கோட்டை, சீலம்பட்டி, அத்திப்பட்டி, தும்முசின்னம்பட்டி, பந்தல்குடி, பாலையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

  நேற்றும் மாவட்ட பட்டியலில் 359 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் மாநில பட்டியலில் 1,016 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் பட்டியல்களில் முரண்பாடு ஏற்பட்டு வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் முரண்பாடுகளை களைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
  Next Story
  ×