என் மலர்
செய்திகள்

கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
சேமிப்பு தொகையை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுவர்கள்- கவர்னர் தமிழிசை பாராட்டு
புதுவையை அடுத்த பாகூரை சேர்ந்த செல்வம் மகன்கள் தாங்கள் சேமித்து வைத்திருந்த ரூ.3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகையை அரசின் கொரோனா நிவாரண நிதிக்காக கவர்னர் தமிழிசையிடம் வழங்கினார்கள்.
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு மையத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு வந்த புதுவையை அடுத்த பாகூரை சேர்ந்த செல்வம் மகன்கள் நிதின், மோஹித் ஆகியோர் தாங்கள் சேமித்து வைத்திருந்த ரூ.3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகையை அரசின் கொரோனா நிவாரண நிதிக்காக கவர்னர் தமிழிசையிடம் வழங்கினார்கள்.
அதனை பெற்றுக்கொண்ட கவர்னர் சேமிப்பு பணத்தை வழங்கிய சிறுவர்களை பாராட்டினார். அப்போது சுகாதாரத்துறை செயலாளர் அருண், கலெக்டர் பூர்வா கார்க் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story






