என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கோப்புப்படம்
பஸ் பயணத்தில் ஏற்படும் நெருக்கடியால் வேகமாக பரவுகிறது கொரோனா
By
மாலை மலர்24 April 2021 5:58 PM GMT (Updated: 24 April 2021 5:58 PM GMT)

அரசு அறிவித்த விதிகளை பறக்க விட்டு பஸ் பயணத்தில் ஏற்படும் நெருக்கடியால் கொரோனா வேகமாக பரவும் நிலை உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவகாசி:
சிவகாசி பஸ் நிலையத்தில் இருந்து தினமும் 200-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கொரோனா பரவலை தடுக்க மாநில அரசு அறிவித்துள்ள இரவு நேர கட்டுப்பாடு காரணமாக 30-க்கும் மேற்பட்ட பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இரவு 9 மணிக்கு பின்னர் சிவகாசியில் இருந்து பெரும்பாலான ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுவதில்லை.
விருதுநகர், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய ஊர்களுக்கு மட்டுமே அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இரவு 9 மணி வரை மினிபஸ்கள் இயக்கப்படுகிறது. அதன் பின்னர் பயணிகள் இருந்தால் மட்டுமே மினி பஸ்கள் இயக்கப்படுகிறது.
இந்தநிலையில் சிவகாசியில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் பஸ் களில் இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அனுமதிக்க வேண்டும் என்று அரசும், போக்குவரத்து கழகமும் உத்தரவிட்ட நிலையில் பெரும்பாலான பஸ்களில் கூடுதல் பயணிகளை ஏற்றி செல்லும் நிலை தொடர்கிறது.
இதனால் மிகுந்த நெருக்கமான பயணத்தை பயணிகள் மேற்கொள்கிறார்கள். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் இதை கடைபிடிக்க பஸ் நிர்வாகத்தினர் மறுக்கிறார்கள்.
இதனால் பஸ் பயணத்தின் போது கொரோனா அதிக அளவில் பரவ வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க வட்டார போக்குவரத்து அலுலர்கள், போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அரசு மற்றும் தனியார் பஸ்களை வழியில் நிறுத்தி ஆய்வு செய்து விதிமீறல்கள் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்போது தான் கொரோனா பரவலை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story
×