
நெல்லித்தோப்பு மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (வயது53). இவர் புதுவையில் ஒரு பிரபல ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மாதவி என்ற மனைவியும், கார்த்திக் என்ற மகனும் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் பாண்டியனுக்கு தலையில் அடிப்பட்டதால் அவருக்கு அவ்வப்போது வலிப்பு ஏற்படும்.
இதற்கிடையே இவர் காலை 5 மணிக்கு எழுந்து ஓட்டல் வேலைக்கு செல்வது வழக்கம். அதுபோல் நேற்று காலை ஓட்டல் வேலைக்கு செல்வதற்காக பாண்டியன் வீட்டின் குளியல் அறைக்கு குளிக்க சென்றார்.
ஆனால் வெகுநேரமாகியும் பாண்டியன் திரும்பாததால் சந்தேமடைந்த அவரது மனைவி மாதவி குளியல் அறைக்கு சென்று பார்த்தார். அங்கு கணவர் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பாண்டியன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மகன் கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.