என் மலர்
செய்திகள்

சிட்டுக்குருவி கூண்டை தமிழிசை சவுந்தரராஜன் பொருத்தினார்.
கவர்னர் மாளிகையில் சிட்டுக்குருவி கூண்டு
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் புதுவை பிரதேச மக்கள் அனைவரும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்து தெரிவித்தார்.
புதுச்சேரி:
சர்வதேச மகிழ்ச்சி தினம் மற்றும் உலக சிட்டுக்குருவி தினம் ஆகியவை நேற்று கவர்னர் மாளிகையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கவர்னர் மாளிகை வளாகத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மரக்கன்று நட்டார். மேலும் அங்குள்ள மரம் ஒன்றில் சிட்டுக்குருவி கூண்டையும் பொருத்தினார்.
நிகழ்ச்சியில் கவர்னரின் ஆலோசகர்கள் சந்திரமவுலி, ஏ.பி.மகேஸ்வரி, சிறப்பு செயலாளர் சுந்தரேசன், விவசாய அதிகாரி சாந்தி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். அப்போது கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் புதுவை பிரதேச மக்கள் அனைவரும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்து தெரிவித்தார்.
Next Story






