search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடியம்பாளையம் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை படத்தில் காணலாம்.
    X
    கொடியம்பாளையம் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை படத்தில் காணலாம்.

    ஊராட்சி மன்ற அலுவலகத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கொடியம்பாளையத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
    கொள்ளிடம்:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொடியம்பாளையம் கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். கடலோர இந்த தீவு கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு 15 ஆண்டுகளுக்கு ேமல் ஆகிறது. எனவே இந்த கட்டிடம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

    மேலும் கட்டிடத்தின் மேல் கூரையின் உள்பகுதியில் காரை பெயர்ந்து காணப்படுகிறது. மழை பெய்தால் மழைநீர் கசிந்து கட்டிடத்தின் உள்ளே தண்ணீர் வருகிறது. இதனால் கட்டிடத்தில் உள்ள கணினி பொறிகள் மற்றும் பதிவேடுகள் நனைந்து பாதிக்க கூடிய நிலையில் உள்ளன.

    செயல்பாட்டில் இருந்து வரும் பழுதடைந்த ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு, புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று அந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×