என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
செம்பனார்கோவிலில் ஆர்ப்பாட்டத்தில் புகார் கொடுக்க வரும் நபர்கள் மீது பொய் வழக்கு போடுவதாக கூறி, போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்து கோஷமிட்டனர்.
பொறையாறு:
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் மேலமுக்கூட்டில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் மார்க்ஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சிம்சன், ரவிச்சந்திரன், அமுல்காஸ்ட்ரோ, கலைச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் புகார் கொடுக்க வரும் நபர்கள் மீது பொய் வழக்கு போடுவதாக கூறி, போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்து கோஷமிட்டனர். இதில் பெண்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
Next Story






