என் மலர்
செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட பணம் உதவி கலெக்டர் குணசேகரனிடம் ஒப்படைக்கப்பட்டபோது எடுத்த படம்.
ஓசூர் அருகே காரில் கொண்டு சென்ற ரூ.1.18 லட்சம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை
ஓசூர் அருகே காரில் கொண்டு சென்ற ரூ.1.18 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பூனப்பள்ளி சோதனைச்சாவடியில் நஞ்சா ரெட்டி தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மடக்கி அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது காருக்குள் ஒரு பையில் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 600 இருந்தது.
இதுகுறித்து அதிகாரிகள் காரில் பணத்தை எடுத்து சென்ற கர்நாடக மாநிலம் ஆனைக்கல் அருகே சிக்கஹாகடே கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆனந்திடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் அவர் வழங்காததால் தேர்தல் பறக்கும் படையினர் பணம் முழுவதையும் பறிமுதல் செய்து, ஓசூர் உதவி கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான குணசேகரனிடம் ஒப்படைத்தனர்.
Next Story






