என் மலர்
செய்திகள்

மயிலாடுதுறையில் பல் டாக்டர்கள் மவுன போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
மயிலாடுதுறையில் மத்திய அரசை கண்டித்து மவுன போராட்டம் - இந்திய பல் மருத்துவ சங்கம் சார்பில் நடந்தது
மத்திய அரசை கண்டித்து மயிலாடுதுறையில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மவுன போராட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை:
மத்திய அரசு சமீபத்தில் ஆயுர்வேத மருத்துவத்தை அலோபதி மருத்துவத்துடன் இணைத்து கலப்பு மருத்துவ முறையை அனுமதித்துள்ளது. இந்த மருத்துவ முறைக்கு டாக்டர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனால் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் நேற்று இந்திய பல் மருத்துவர்கள் சங்கம் சார்பில் உரிமை மீட்பு போராட்டம் என்ற தலைப்பில் வாயை மூடி மவுனமாக நின்று மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் போராட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு நாகை மாவட்ட பல் மருத்துவ சங்க செயலாளர் சையது அன்வா் தலைமை தாங்கினார். போராட்டத்தின்போது பல் டாக்டர்கள் முகக் கவசம் அணிந்தபடி தங்கள் வாயை மூடி மவுனமாக நின்று மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
அரை மணி நேரம் மவுனமாக நின்ற பல் மருத்துவர்கள் பின்னர் கலைந்து சென்றனர்
Next Story






