என் மலர்
செய்திகள்

ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீர்.
நரிக்குடி அருகே ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீர் - பொதுமக்கள் அவதி
நரிக்குடி அருகே ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீரால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
காரியாபட்டி:
நரிக்குடியில் இருந்து மானூர் செல்லும் சாலையில் ெரயில்வே சுரங்கப்பாதை உள்ளது.
இங்கு மழை காலங்களில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து செல்ல முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லும்போது பாலத்தில் இருந்த தண்ணீரை மோட்டார் மூலம் அகற்றி விடுகின்றனர்.
இந்தநிலையில் தற்போது இந்த பகுதியில் மழை பெய்யவில்லை. இருப்பினும் கால்வாயில் செல்லும் தண்ணீர் கசிந்து பாலத்தில் தேங்கி நிற்கிறது.
இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். நரிக்குடியில் இருந்து இந்த வழியாக மானூர், உழக்குடி, திருமாணிக்கனேந்தல், அத்திகுளம் பகுதி பொதுமக்கள் சென்று வருகின்றனர். மழை காலங்களில் அதிக அளவில் தண்ணீர் தேங்குவதால் இவர்கள் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வர வேண்டிய சூழ்நிலை உள்ளது.
எனவே இந்த பாலத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






