என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்த காட்சி
    X
    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்த காட்சி

    அரியலூர் அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்

    அரியலூர் நகரில் உள்ள முக்கிய இடங்களில் நெடுஞ்சாலைத்துறையினர், பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.
    அரியலூர்:

    அரியலூரில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு சாலை பாதுகாப்பு மாத விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கோட்ட பொறியாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி பேசுகையில், வாகனங்களில் செல்பவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடித்து சாலைகளில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகைகளை கவனித்து வாகனங்களை ஓட்ட வேண்டும். விபத்துகள் இல்லாத மாவட்டமாக அரியலூரை முதன்மைப்படுத்த வேண்டும், என்றார். 

    உதவி கோட்ட பொறியாளர் நடராஜன் முன்னிலை வகித்தார். முன்னதாக இளநிலை பொறியாளர் எழிலரசன் வரவேற்றார். மேலும் நகரில் உள்ள முக்கிய இடங்களில் நெடுஞ்சாலைத்துறையினர், பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

    Next Story
    ×