என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  சாத்தூர் அருகே மது விற்ற 4 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாத்தூர் அருகே மது விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  சாத்தூர்:

  சாத்தூர் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது. சாத்தூர் குருலிங்காபுரத்தில் வைத்து மதுபாட்டில் விற்ற அதேபகுதியை சேர்ந்த மகேந்திரன் (வயது 61), படந்தால் கிராமத்தில் மதுவிற்ற கருப்பாயி (50) ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மொத்தம் 35 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதேபோல் சாத்தூர் தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது பெரிய கொல்லபட்டி விலக்கு அருகே வைத்து மதுபாட்டில் விற்ற அமீர்பாளையத்தை சேர்ந்த ராமு (41), கன்மாய்சூரங்குடி பகுதியில் மதுபாட்டில் விற்ற அதேகிராமத்தை சேர்ந்த மாரியப்பன் (53) ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மொத்தம் 14 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
  Next Story
  ×