என் மலர்
செய்திகள்

வ.புதூர் கிராமத்தில் வாருகால் சேதமடைந்து கழிவுநீர் தேங்கி நிற்கும் காட்சி.
வத்திராயிருப்பு அருகே சுகாதார வளாகம் அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
வத்திராயிருப்பு அருகே வ.புதூர் கிராமத்தில் சுகாதார வளாகம் அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடு்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு தாலுகா மகாராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது வ.புதூர். இந்த பகுதியில் உள்ள மக்கள் தங்கள் அன்றாட பணிகளுக்காக சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளுக்கு செல்கின்றனர்.
இந்தநிலையில் இந்த பகுதியில் மெயின்ரோடு மற்றும் பல்வேறு தெருக்களில் உள்ள கழிவுநீர் வாருகால்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை. ஆதலால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்களின் தொல்லையும் அதிகமாக உள்ளது. மேலும் தொற்றுநோய் பரவும் அபாய நிலையும் நிலவுகிறது.
அதேபோல இந்த பகுதியில் போதுமான தெருவிளக்குகள் இல்லை. சுகாதார வளாகம் இல்லாததால் இந்த பகுதியில் உள்ள பெண்கள் திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு அடிப்படை வசதிகள் எதுவுமின்றி இந்த பகுதியில் உள்ள மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.
எனவே அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவுநீர் வாருகால், மகளிர் சுகாதார வளாகம், தெரு விளக்கு ஆகியவை அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






