என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
    X
    கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    திருமானூரில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

    திருமானூர் பஸ் நிலையம் அருகே உள்ள கோவிலின் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் பஸ் நிலையம் அருகே மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் அந்த கோவிலின் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றனர். நேற்று காலை கோவில் நிர்வாகத்தினர் வந்து பார்த்தபோது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் இது குறித்து திருமானூர் போலீசில் புகார் அளித்தனர். உண்டியலில் சுமார் ரூ.3 ஆயிரத்துக்கு மேல் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து திருமானூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×