என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    அச்சரப்பாக்கம் அருகே மது விற்ற 2 பெண்கள் கைது

    அச்சரப்பாக்கம் அருகே மது விற்ற 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அச்சரப்பாக்கம்:

    செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் டி.அந்தோனிஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் எஸ்.விஜயகுமார் மற்றும் போலீசார் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்று கொண்டிருந்த தேன்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சாந்தி (45) மற்றும் சூணாம்பேடு பகுதியை சேர்ந்த சாந்தி (35) ஆகிய 2 பெண்களை கைது செய்து செய்யூர் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×