என் மலர்

    செய்திகள்

    விஷம்
    X
    விஷம்

    குழந்தை இல்லாத விரக்தியில் பெண் விஷம் குடித்து தற்கொலை- ஆர்.டி.ஓ. விசாரணை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    உளுந்தூர்பேட்டை அருகே குழந்தை இல்லாத விரக்தியில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறுகிறது.
    உளுந்தூர்பேட்டை:

    உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ப.கிள்ளனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 31) தொழிலாளி. இவருடைய மனைவி கஸ்தூரி(29). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை. இதனால் மிகவும் மன உளைச்சலில் இருந்த கஸ்தூரி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கஸ்தூரி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கஸ்தூரிக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆவதால் வரதட்சணை கொடுமை காரணமாக கஸ்தூரி தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து திருக்கோவிலூர் ஆர்.டி.ஓ. சாய்வர்தினி விசாரணை நடத்தி வருகின்றார்.
    Next Story
    ×