என் மலர்

  செய்திகள்

  தாக்குதல்
  X
  தாக்குதல்

  திருத்தங்கல் அருகே தொழிலாளி மீது தாக்குதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருத்தங்கல் அருகே தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  சிவகாசி:

  திருத்தங்கல் அருகே உள்ள சுக்கிரவார்பட்டியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 36). இவர் தீப்பெட்டி ஆலையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரமாதேவிக்கும், அதே பகுதியில் வசிக்கும் புஷ்பம் என்பவருக்கும் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் புஷ்பம் மற்றும் அவரது உறவினர் குமார், ராமர், காந்தி, சந்திரன், விஜயா ஆகியோர் தர்மராஜன் வீட்டிற்குள் புகுந்து அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து தர்மராஜன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×