search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 51 பேருக்கு கொரோனா

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 2 லட்சத்து 54 ஆயிரத்து 984 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 15 ஆயிரத்து 795 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 2 ஆயிரத்து 738 பேரின் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட வில்லை.

    14 ஆயிரத்து 475 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். முகாமில் 4 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 120 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் முத்துராமன்பட்டியை சேர்ந்த 36 வயது பெண், அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் 27 வயது நபர், கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் 45,53, 51, 46 மற்றும் மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் பணியாற்றும் 46 வயது நபர்கள், விருதுநகரை சேர்ந்த 40 வயது பெண், சிவகாசி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் பணியாற்றும் 29 வயது நபர், பந்தல்குடி இந்திரா நகர், திருத்தங்கல், வத்தராயிருப்பு, தாயில்பட்டி உள்பட மாவட்டம் முழுவதும் 51 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 846 ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் 5 பேருக்கு பேருக்கு மேல் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு பிரிவில் பணியாற்றும் அலுவலர்களுக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

    நேற்று முன்தினம் 2 ஆயிரத்து 197 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 2,788 பேருக்கு மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. கிராமப்புறங்களில் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. பந்தல்குடி பகுதியில் கடந்த 3 வாரங்களாக தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையிலும் அந்த பகுதி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படாத நிலை தொடர்கிறது. மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாட்டு பகுதிக்கான பட்டியலை தயாரிக்கும் போது பாதிப்பு ஏற்பட்ட கிராமங்களை கண்டறிந்து கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவித்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×