என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்11 Oct 2020 6:54 AM IST (Updated: 11 Oct 2020 6:54 AM IST)
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 2 லட்சத்து 50 ஆயிரத்து 888 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 15 ஆயிரத்து 649 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
3 ஆயிரத்து 478 பேரின் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. 14 ஆயிரத்து 293 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு முகாமில் 4 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 55 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
மாவட்டத்தில் நேற்று புதிதாக 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ரோசல் பட்டியை சேர்ந்த 60 வயது முதியவர், 52 வயது நபர், 54 வயது நபர், 56 மற்றும் 52 வயது பெண்கள், சூலக்கரை வ.உ.சி. நகரை சேர்ந்த 64 வயது முதியவர், 48 வயது நபர், முத்தால் நகரை சேர்ந்த 84 வயது முதியவர், பாலன் நகரை சேர்ந்த 49 வயது நபர், சத்திரரெட்டியபட்டியை சேர்ந்த 24 வயது நபர், விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் வளாகத்தில் உள்ள நர்சிங் பள்ளியை சேர்ந்த 30 வயது பெண், அருப்புக்கோட்டையை சேர்ந்த 4 பேர், சிதம்பராபுரம், பந்தல்குடி, மல்லாங்கிணறு, பச்சேரி, ஆலடிப்பட்டி, சிங்கம்பட்டி, நெடுங்குளம், உப்புபட்டி, சாத்தூரை சேர்ந்த 2 பேர், ராவுத்தன்பட்டி, என்.மேட்டுப்பட்டி உள்பட மாவட்டம் முழுவதும் 69 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,718 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் நேற்று முதல் முறையாக 60 பேருக்கு மேல் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக முற்றிலுமாக கிராமப்பகுதிகளிலேயே அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிராமப்பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படாததாலும், பாதிப்பு ஏற்பட்ட கிராமங்களை கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவித்து கண்காணிக்காததாலும் தான் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
விருதுநகர் அருகே உள்ள ரோசல்பட்டி கிராமத்தில் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையிலும் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்காததால் நேற்று அந்த கிராமத்தில் 5 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் கிராமப்பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பஞ்சாயத்து நிர்வாகத்தினருக்கு உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story
×