என் மலர்
செய்திகள்

கொரோனா பரிசோதனை கோப்புப்படம்
விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 23 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 222 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 2 லட்சத்து 47 ஆயிரத்து 466 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 15 ஆயிரத்து 599 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 3 ஆயிரத்து 681 பேரின் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட வில்லை. 14 ஆயிரத்து 239 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
ஒரு முகாமில் 10 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 54 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
மாவட்டத்தில் நேற்று புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள செவிலியர் பயிற்சி பள்ளியில் படிக்கும் 21 வயது மாணவி, லிங்க் ரோட்டில் வசிக்கும் 20 வயது இளம்பெண், பாரதியார் தெருவில் வசிக்கும் 56 வயது நபர், சூலக்கரை வி.ஓ.சி. நகரைச் சேர்ந்த 74 வயது முதியவர், ரோசல்பட்டியைச் சேர்ந்த 46 வயது நபர், ஆமத்தூரைச் சேர்ந்த 23 வயது வாலிபர், 43 வயது பெண் மற்றும் கிழவனேரியைச் சேர்ந்த 3 பேர், சித்தமடத்தைச் சேர்ந்த 2 பேர், காரியாபட்டி, மேலமுடிமன்னார்கோட்டை, பாலையம்பட்டி, அருப்புக்கோட்டை, உழுத்திமடை, மறையூர், சாத்தூர், மல்லாங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 222 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன் தினம் 2,210 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இதுவரை 3 ஆயிரத்து 681 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட வில்லை. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கிராமப்பகுதிகளைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் கிராமப்பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story