என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா தொற்று

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 15,368ஆக உயர்ந்துள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 2 லட்சத்து 35 ஆயிரத்து 348 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 15 ஆயிரத்து 337 பேருக்கு கொரோனா உறுதியானது. 4 ஆயிரத்து 79 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட வில்லை. 13 ஆயிரத்து 923 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

    ஒரு முகாமில் 18 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 75 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் நேற்று 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த 35 வயது பெண், பெரியவள்ளிக்குளத்தைச் சேர்ந்த 41 வயது நபர், மேற்கு பாண்டியன் காலனியைச் சேர்ந்த 65 வயது முதியவர், சூலக்கரை போலீஸ் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 27 வயது நபர், சூலக்கரையை சேர்ந்த 26 வயது பெண், 67 வயது முதியவர், முத்துராமன்பட்டியைச் சேர்ந்த 26 வயது நபர், கூத்திப்பாறையைச் சேர்ந்த 3 பேர், சிட்டவண்ணான்குளத்தைச் சேர்ந்த 3 பேர், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், சித்துராஜபுரத்தைச் சேர்ந்த 7 பேர் உள்பட 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 368 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 2 ஆயிரத்து 99 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், 4,079 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படாத நிலை இருந்தது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளும் தெரிவிக்கப்பட வில்லை. முடிவுகள் தாமதம் ஆவது நோய் பரவலுக்கு வாய்ப்பை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் மருத்துவ பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    Next Story
    ×