என் மலர்
செய்திகள்

கொரோனா பரிசோதனை கோப்புப்படம்
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 2 லட்சத்து 456 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 14,600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. 8,294 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
இதுவரை 13,028 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். ஒரு சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களில் 25 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 162 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. சிவகாசி ஆலமரத்துப்பட்டி ரோட்டை சேர்ந்த 49 வயது நபர், அம்மன்கோவில்பட்டியை சேர்ந்த 32 வயது பெண், சிவகாசி இந்திராநகரை சேர்ந்த 60 வயது மூதாட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டி வடக்குதெருவை சேர்ந்த 17 வயது சிறுமி, மடவார்வளாகத்தை சேர்ந்த 32 வயது பெண், மஞ்சுளாதெருவை சேர்ந்த 36 வயது பெண், ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திராநகரை சேர்ந்த 35 வயது நபர் உள்பட 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 14,635 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 2,200 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 8,294 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.
2 தினங்களுக்கு முன்னர் தெரிவிக்கப்படாமல் இருந்த 1,600 பேரின் மருத்துவ பரிசோதனையில் முடிவுகள் ஏதும் தெரிவிக்கப்படாத நிலை நீடிக்கிறது. மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிப்பதில் தொடர்ந்து தாமதம் அதிகரித்து வரும் நிலையில் முடிவுகளை உடனுக்குடன் தெரிவிக்க மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை ஏதும் எடுக்காத நிலை தொடர்கிறது. தற்போதுள்ள நிலையில் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பின் உண்மை நிலவரம் மாவட்ட மக்களுக்கு தெரிய முடியாத நிலையே நீடிக்கிறது.

Next Story