என் மலர்

  செய்திகள்

  செண்பகத் தோப்பு பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தை காணலாம்
  X
  செண்பகத் தோப்பு பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தை காணலாம்

  செண்பகத்தோப்பு பகுதியில் திடீர் காட்டாற்று வெள்ளம்- பொதுமக்கள் உயிர் தப்பினர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு பகுதியில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
  ஸ்ரீவில்லிபுத்தூர்:

  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது செண்பகத்தோப்பு. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள இந்த பகுதியில் ஏராளமான அருவிகள், நீரோடைகள் மற்றும் புகழ் பெற்ற கோவில்கள் உள்ளன.

  தற்போது கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படுவதால் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செண்பகத் தோப்பிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், பக்தர்களும் வந்து குளித்து மகிழ்வதுடன் சாமி தரிசனம் செய்து செய்கின்றனர்.

  நேற்றும் ஏராளமானோர் தங்கள் குடும்பத்துடன் இங்குள்ள அருவிகள் மற்றும் நீரோடைகளில் குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை உச்சி பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக பேச்சி அம்மன் கோவில் பின்புறம் உள்ள நீரோடையில் செம்மண் நிறத்தில் காட்டாற்று வெள்ளம் திடீரென கரைபுரள தொடங்கியது.

  நீரோடைகளில் தண்ணீர் நிறம் மாறி கரை புரண்டு வருவதை கண்ட பொதுமக்கள், நீரோடையின் மறுகரையில் இருந்தவர்கள் வேகமாக வெளியேற தொடங்கினர். நேரம் ஆக ஆக தண்ணீர் அதிகரித்த நிலையில் அனைவரும் பயத்தில் பரபரப்பாக தங்கள் குழந்தைகளுடன் வேகமாக தண்ணீரை விட்டு வெளியே வந்தனர்.

  காட்டாற்று வெள்ளம் வரத் தொடங்கிய சில மணி நேரத்திலேயே ஏராளமானோர் வேகமாக வெளியேறியதால் பெரிய உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. காட்டாற்று வெள்ளம் தங்களை அடித்து சென்று விடுமோ என்ற பயத்தில் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
  Next Story
  ×