search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    மாவட்டத்தில் ஒரே நாளில் 97 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 14,300 ஆக உயர்வு

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 84 ஆயிரத்து 589 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 14,203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. 6,246 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. 12,589 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.

    2 சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களில் 48 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.வீடுகளில் 274 பேர் தனிமைப்படுத்திவைக்கப்பட்டுள்ளனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. விருதுநகர் முத்துராமன்பட்டி பவுன்டு தெருவை சேர்ந்த 52,26 வயது பெண்கள், ஒரு வயது ஆண் குழந்தை, ஆர்.ஆர்.நகர் தனியார் சிமெண்ட் ஆலையில் பணியாற்றும் 32, 33 வயது நபர்கள், விருதுநகர் காந்திநகரை சேர்ந்த 56 வயது நபர், ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் 39, 33 வயது நபர்கள், ஆமத்தூரை சேர்ந்த 33 வயது நபர் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சிவகாசி முத்துராமலிங்ககாலனியை சேர்ந்த 50 வயது நபர், திருத்தங்கல் பசும்பொன் நகரை சேர்ந்த 17 வயது சிறுமி, சசிநகரை சேர்ந்த 40, 26 வயது நபர்கள், திருப்பதி நகரை சேர்ந்த 33 வயது பெண், பாலாஜிநகரை சேர்ந்த 21 வயது பெண், மாரனேரி ஆரம்ப சுகாதாரநிலையத்தில் பணியாற்றும் 55 வயது பெண் ஆகியோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    பனைக்குடியை சேர்ந்த 2 பேர், ஆவியூர், சாத்தூர், மல்லாங்கிணறு, உப்பத்தூரை சேர்ந்த 2 பேர், வலையப்பட்டியை சேர்ந்த 4 பேர், சின்னப்ரெட்டியப்பட்டியை சேர்ந்த 2 பேர், காடனேரி, முகவூர், பெருமாள்பட்டி, தளவாய்புரம், ராஜபாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 97பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,300 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் மருத்துவ பரிசோதனை 1040 ஆக குறைந்துள்ளது. கிராமப்பகுதிகளில் நோய்பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் மருத்துவ பரிசோதனையை வெகுவாக குறைத்துவிட்டது ஏன்? என்று தெரியவில்லை. பொதுப்போக்குவரத்து மற்றும் ரெயில் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவ பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என தலைமை செயலாளர் அனைத்து மாவட்ட நிர்வாகத்தினருக்கும் அறிவுறுத்திய நிலையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மருத்துவ பரிசோதனையை குறைத்தது அதிர்ச்சி அளிப்பதாகஉள்ளது.

    மருத்துவபரிசோதனை குறைக்கப்பட்டால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் குறையும் நிலை ஏற்படும். ஆனால் உறுதியாக அது உண்மை நிலவரமாக இருக்க வாய்ப்பு இல்லை. இதனை மாவட்டநிர்வாகம் கிராமப்பகுதிகளில் மருத்துவ பரிசோதனையைஅதிகரிக்க முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 209 ஆக உயர்ந்துள்ளது.
    Next Story
    ×