என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    முருங்கப்பாக்கத்தில் கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் டாக்டர் மாயம்

    முருங்கப்பாக்கத்தில் கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு வெளியே சென்ற பெண் டாக்டர் மாயமானார்.

    புதுச்சேரி:

    புதுவை முருங்கப்பாக்கம் அரவிந்தர்நகர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் அழகானந்தம். இவரது மகள் இந்துமதி (வயது30). ஆயுர்வேத டாக்டர்.

    சம்பவத்தன்று இரவு இந்துமதி வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் இந்துமதி இல்லை.

    இதற்கிடையே இந்துமதி வீட்டில் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தில் ஒரு இடத்தில் வேலைக்கு சேரபோகிறேன் என்று மட்டும் அதில் குறிப்பிட்டு இருந்தார்.

    இதையடுத்து இந்துமதி மாயமானது குறித்து முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்ரசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×