என் மலர்

  செய்திகள்

  மரணம்
  X
  மரணம்

  சாத்தூர் அருகே தீக்குச்சி மூடைகளை இறக்கிய போது தீப்பிடித்து பெண் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாத்தூர் அருகே தீக்குச்சி மூடைகளை இறக்கிய போது தீப்பிடித்து பெண் பரிதாபமாக இறந்தார். மேலும் ஒரு பெண் காயம் அடைந்தார்.
  சாத்தூர்:

  சாத்தூர் அருகே சடையம்பட்டியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆபீஸ் உள்ளது. அதில் மருந்து தடவிய தீக்குச்சிகளை தீப்பெட்டியில் அடைக்கும் பணியில் 15-க்கும் மேற்பட்ட பெண்கள் வேலைபார்த்து வருகின்றனர். நேற்று வழக்கம் போல பெண்கள் பணியில் இருக்கும் போது வண்டியில் இருந்து மருந்து தடவிய தீக்குச்சி மூடைகளை இறக்கும் போது எதிர்பாராதவிதமாக குச்சி உராய்வினால் தீப்பிடித்தது.

  இதனால் அங்கு பணியில் இருந்த பெண்கள் வெளியே ஓடி வந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த சாத்தூர் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

  இருப்பினும் இந்த தீவிபத்தில் பார்வதி (வயது 50) என்பவருக்கு கை மற்றும் கால்களில் தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

  மேலும் தீவிபத்தில் குறுகிய அறைக்குள் மூச்சுத்திணறி கிருஷ்ணம்மாள் (60) என்பவர் இறந்தார். அவரின் உடலை கைப்பற்றி சாத்தூர் தாலுகா போலீசார் பிரேத பரிசோதனைக்கு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×