search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுரேந்தர்
    X
    சுரேந்தர்

    கறுப்பர் கூட்டம் சுரேந்தர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

    கறுப்பர் கூட்டம் சுரேந்தர் மீது அரியாங்குப்பம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    புதுச்சேரி:

    கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்டதாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சுரேந்தர் என்பவர் புதுச்சேரியில் ஜூலை 17-ந்தேதி சரணடைந்தார்.

    செந்தில்வாசனிடம் நடத்திய விசாரணையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு வீடியோ தயாரிக்கும் ஸ்டுடியோவாகச் செயல்பட்டு வந்த சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்தில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் ஆய்வு செய்து ஹார்ட்டிஸ்க், பென் டிரைவ், லேப்டாப் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றி சீல் வைத்தனர்.

    இந்த நிலையில் கறுப்பர் கூட்டம் சுரேந்தர் மீது புதுச்சேரி போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    உரிய அனுமதியின்றி இ-பாஸ் பெறாமல் புதுச்சேரிக்குள் நுழைந்தது, கூட்டம் கூட்டியது, மாஸ்க் அணியாதது உள்ளிட்ட 3 பிரிவுகளில் சுரேந்தர் மீது அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 
    Next Story
    ×