என் மலர்
செய்திகள்

கிருமிநாசினி தெளிக்கும் பணி
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிப்பு
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கட்டிடப்பணிக்கு வந்த தொழிலாளிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையொட்டி அங்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிய கருவூலம், உதவி கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்். இதற்கிடையே, கொரோனா ஊரடங்கு பிறப்பித்ததால் உடனடியாக கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டன.
அதன் பிறகு ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டதையொட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள உணவகங்கள், டீக்கடைகள் அனைத்தும் இயங்கின. இதையடுத்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் கட்டுமான பணிகளும் தொடங்கியது. இந்த பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் அங்கேயே தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நெல்லை கொக்கிரகுளத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையொட்டி அந்த நபரிடம் தொடர்பு வைத்திருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் கட்டுமான பணிக்கு வந்த தொழிலாளி ஒருவருக்கும் நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த தகவல் அனைத்து இடங்களுக்கும் பரவியது. இதனால் கலெக்டர் அலுவலகத்தின் தென்பகுதிக்கு செல்வதற்கே மக்கள் அச்சப்பட்டனர். மேலும் அந்த தொழிலாளி அங்குள்ள டீக்கடைகள், உணவகங்களுக்கும், தண்ணீர் பிடிப்பதற்காக சில அலுவலகத்திற்கும் சென்று வந்தது தெரியவந்தது. மேலும் அவர் வேறு யாரையெல்லாம் சந்தித்தார்? என்று தெரியவில்லை.
இதையடுத்து நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மேலும் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் வந்து கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்தனர். கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் மற்ற பாதைகளும் அடைக்கப்பட்டன. அங்குள்ள உணவகங்கள், டீக்கடைகளுக்கு யாரும் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை செய்யப்பட்டனர்.
மேலும் கொரோனா சிறப்பு பரிசோதனை குழுவினர் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். கொரோனா பாதிக்கப்பட்ட கட்டிட தொழிலாளியுடன் தங்கியிருந்து வேலை பார்த்தவர்கள் அனைவருக்கும் நேற்று காலை முதல் மாலை வரை கொரோனா பரிசோதனை செய்தனர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story