என் மலர்
செய்திகள்

புதுச்சேரியில் நாளை முதல் மதுபானக்கடைகள் திறப்பு
புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறப்பு
புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும், கூடுதல் வரி 3 மாதங்கள் அமலில் இருக்கும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நாளை முதல் மதுபானக்கடைகள் திறக்கப்படும். நாளை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது மதுபானங்கள் மீது உயர்த்தப்பட்ட வரிகள் 3 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என அம்மாநில அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தமிழகத்தின் டாஸ்மாக் விலைக்கு நிகராக புதுச்சேரியில் மதுபானங்கள் விலையை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் விற்கப்படாத மதுபானங்களை புதுச்சேரியில் விற்றால் கூடுதலாக 25% கொரோனா வரி, சாராயத்திற்கு 20 சதவீத கொரோனா வரி என அரசாணை வெளியிடப்பட்டது.
Next Story






