என் மலர்
செய்திகள்

துவரம் பருப்பு
பயனாளிகளுக்கு இலவச துவரம் பருப்பு 29-ந்தேதி முதல் விநியோகம்
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகளுக்கு இலவச துவரம் பருப்பு 29-ந் தேதி முதல் வீடு, வீடாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
புதுச்சேரி:
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகளுக்கு 3 மாதத்திற்கு 15 கிலோ அரிசி, 3 கிலோ துவரம் பருப்பு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
இத்திட்டத்தின் கீழ் புதுவைக்கு ஒதுக்கப்பட்ட 9 ஆயிரத்து 425 டன் அரிசி கடந்த 12-ந் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. புதுவைக்கு தேவையான துவரம் பருப்பு 525 டன் தேவைப்படுகிறது. முதல் கட்டமாக ஆந்திராவில் இருந்து 125 டன் துவரம் பருப்பு லாரிகள் மூலம் புதுவைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தர பரிசோதனைக்கு பிறகு 3 கிலோ பாக்கெட்டுகளாக பேக்கிங் செய்யப்பட்டு வரும் 29-ந் தேதி முதல் வீடு, வீடாக பருப்பு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

Next Story