search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    புதுவையில் கறி விருந்து- அரசு ஊழியர்கள் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு

    புதுவையில் ஊரடங்கு உத்தரவை மீறி கறி சமைத்து விருந்து வைத்தது தொடர்பாக அரசு ஊழியர்கள் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    கொரோனா தொற்று பரவுவதை தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.

    ஊரடங்கு காலத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் படி மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகிறது. வீட்டை விட்டு வெளியே வரும்போது முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் இளைஞர்கள் ஒன்றுகூடி சமைத்து கறி விருந்து சாப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல புதுவையில்லும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. புதுவை மணவெளி பகுதியில் ஒரு தோப்பில் 14 பேர் ஒன்றுகூடி கறி சமைத்து ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுள்ளனர். இதில் 2 அரசு ஊழியர்களும் அடங்கும். இந்த சம்பவத்தை விருந்தில் பங்கேற்றவர்கள் முகநூலில் வீடியோ, புகைப்படமாக வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து இவர்கள் மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே அவர்கள் தங்கள் வீடியோவை முக நூலில் இருந்து நீக்கினர். இருப்பினும் போலீசாருக்கு புகைப்படங்கள் ஆதாரமாக கிடைத்தது. இதன்பேரில் 2 அரசு ஊழியர்கள் உள்ளிட்ட 14 பேர் மீது வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×