search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மதுரை மாவட்டத்தில் தடை மீறல்: ஒரே நாளில் 408 பேர் கைது

    144 தடை உத்தரவை மீறியதாக மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 408 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 172 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    மதுரை:

    மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி, ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதற்காக தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவுகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    அதனடிப்படையில், மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்டவர்கள் மீது இதுவரை 2432 வழக்குகள் பதிவு செய்து வழக்கில் சம்பந்தப்பட்ட 2980 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 1643 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    நேற்று (5-ந்தேதி) மட்டும் விதி மீறலில் ஈடுபட்டவர்கள் மீது 349 வழக்குகள் பதிவு செய்து 408 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 172 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இந்த விதிமீறல்களை தடுக்கும் வகையில் காவல்துறை அதிகாரிகள் மதுரை மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

    மேலும் தடை உத்தரவை அனைத்து பொதுமக்களும் கண்டிப்பாக கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைக்குமாறும், விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

    மதுரையில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியே சுற்றித்திரிந்த கே.புதூரைச் சேர்ந்த ராமன் (வயது 21) என்பவர் பிடிட்டார். போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

    இதேபோல் கள்ளந்திரி, கரும்பாலை, எல்லீஸ்நகர், பூக்காரத்தெரு, சர்ச் ரோடு, நியூ எல்லீஸ் காலனி, சர்வோதயா தெரு, மகபூப்பாளையம், நரிமேடு பகுதிகளைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஊரடங்கு உத்தரவை மீறி முத்துராமலிங்க புரத்தில் கடையை திறந்து வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

    சூர்யா நகர், காந்திபுரம், பழனி செல்லாண்டி அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த 5 வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். எல்லீஸ் நகர் பகுதியைச் சேர்ந்த தள்ளுவண்டி வியாபாரியும் கைதானார்.

    உத்தங்குடியைச் சேர்ந்த காய்கறி வியாபாரி, செல்லூர், காதக்கிணறு, சர்வேயர் காலனியைச் சேர்ந்தவர்கள் என வியாபாரிகள் உள்பட 306 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் மீது ஊரடங்கு உத்தரவை மீறியதாக 310 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×