search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கதிர்காமம் மருத்துவமனை பல்நோக்கு ஊழியர்கள் திடீர் போராட்டம்

    புதுவை கதிர்காமம் அரசு மருத்துவமனை பல்நோக்கு ஊழியர்கள் இன்று காலை பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுச்சேரி:

    புதுவை கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 700 படுக்கையுடன் சிறப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட பல்நோக்கு ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரையும் மருத்துவமனையிலேயே தங்கி பணியாற்ற நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    பல்நோக்கு ஊழியர்களுக்கு அதிகபட்சமாக மாதம் ரூ.3 ஆயிரத்து 500 சம்பளமாக வழங்கப்படுகிறது. இவர்களின் பணிக்கு பாதுகாப்பும் இல்லை. இதனால் தங்களால் மருத்துவமனையில் தங்கி பணியாற்ற முடியாது என போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

    இன்று காலை மருத்துவமனையில் பணிகளை புறக்கணித்து 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை ஊழியர்களே திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பையும், பதட்டத்தையும் உருவாக்கியுள்ளது.
    Next Story
    ×