என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காட்சி
    X
    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காட்சி

    பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா

    உடையார்பாளையம் வடக்கு நடுநிலைப்பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா நடைபெற்றது.
    உடையார்பாளையம்:

    உடையார்பாளையம் வடக்கு நடுநிலைப்பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஹரிசுந்தர்ராஜ் தலைமை தாங்கினார். உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவிகள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எடுத்துரைத்தார்.

    இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் கார்த்திகேயன், ஆறுமுகம், மலர்க்கொடி, கனிமொழி ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் உதவி ஆசிரியை வானதி நன்றி கூறினார்.
    Next Story
    ×