என் மலர்

  செய்திகள்

  பெண்ணின் ஏ.டி.எம். கார்டை வாங்கி ரூ.18 ஆயிரம் திருடியவர் கைது
  X

  பெண்ணின் ஏ.டி.எம். கார்டை வாங்கி ரூ.18 ஆயிரம் திருடியவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெண்ணுக்கு உதவுவதுபோல் நடித்து இன்னொரு ஏ.டி.எம். கார்டை கொடுத்து வேறு இடத்தில் ரூ.18 ஆயிரம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
  கடத்தூர்:

  தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், அய்யம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி பிரகாஷ். இவரது மனைவி தமிழரசி (வயது 20).

  கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழரசி கடத்தூர்- பொம்மிடி சாலையில் உள்ள ஒரு ஏ.டி.எம்.மில் கைக்குழந்தையுடன் சென்று பணம் எடுக்க முயற்சி செய்து உள்ளார். அப்போது சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், பணம் எடுக்க உதவி செய்வது போல் நடித்து இளம்பெண் வைத்திருந்த ஏ.டி.எம். அட்டைக்கு பதிலாக வேறொரு அட்டையை வழங்கிவிட்டு சென்று உள்ளார். அந்த நேரத்தில் ஏ.டி.எம். ரகசிய எண்ணையும் அவர் தெரிந்து கொண்டார். சிறிது நேரத்துக்கு பிறகு, தமிழரசியின் ரகசிய எண்ணை பயன்படுத்தி ஏ.டி.எம்.மில் இருந்து ரூ.18,500 எடுத்து உள்ளார்.

  இதுகுறித்து தமிழரசி அளித்த புகாரின்பேரில் கடத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து தமிழரசியை ஏமாற்றியவரை கைது செய்தனர். அவரது பெயர் அன்பரசு (51) கடத்தூர் அருகே உள்ள நொச்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். அவர் வேறு யாரிடமாவது இதுபோல மோசடியில் ஈடுபட்டு உள்ளாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×