என் மலர்
செய்திகள்

வெள்ளகோவிலில் வாக்காளர் அட்டையில் வாலிபர் படத்திற்கு பதில் இளம்பெண் படம்
வெள்ளக்கோவிலில் இளைஞர் ஒருவருக்கு வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையில் பெண்ணின் புகைப்படம் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளக்கோவில்:
தமிழகத்தில் அவ்வப் போது அரசின் ரேஷன் ஸ்மார்ட் கார்டில் நடிகையின் படம், விநாயகர் படம், செருப்பு உள்பட பல படங்கள் இடம் பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஒரு வாலிபரின் வாக்காளர் அடையாள அட்டையில், பெண்ணின் புகைப்படம் வெளியான சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளகோவில் நகராட்சிக்குட்பட்ட, உப்புப்பாளையம் ரோடு வார்டு 5-ல் வசிக்கும் பெரியசாமி(19) என்ற ஆண் வாக்காளர் அடையாள அட்டையில் பெண்ணின் படம் தவறுதலாக அச்சிடப்பட்டுள்ளது.
இது குறித்து வெள்ள கோவிலில் நடந்த சிறப்பு முகாமில் இந்த அடையாள அட்டையை திருத்துவதற்காக பெரியசாமி கொடுத்தார். தேர்தலில் வாக்குப்பதிவுக்கு வாக்காளர் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு அலுவலகங்களில் அடையாள சான்றுக்கும் வாக்காளர் அடையாள அட்டை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் இதுபோன்ற குளறுபடியால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Next Story