என் மலர்

  செய்திகள்

  திருமங்கலம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி
  X

  திருமங்கலம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருமங்கலம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

  பேரையூர்:

  விருதுநகரைச் சேர்ந்தவர் மரகதவேல் (வயது 41). இவர் தனியார் எண்ணை நிறுவனத்தில் சூப்பர் வைசராக பணியாற்றி வந்தார். இவரது நண்பர்கள் திலீபன் (29), கலைராஜன் (49), ஆரோக்கியராஜ் (27). இவர்கள் 4 பேரும் 4 சக்கர வாகனத்துக்கு உதிரி பாகங்கள் வாங்குவதற்காக காரில் மதுரை வந்தனர்.

  பின்னர் விருதுநகருக்கு புறப்பட்டனர். திருமங்கலத்தை அடுத்த ராயபாளையம் அருகே கார் சென்று கொண்டிருந்தது.

  திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி மரகதவேல் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

  Next Story
  ×