search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பத்திரப்பதிவு அலுவலங்களில் டோக்கன் முறை அமல் - 30 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்யும் வசதி
    X

    பத்திரப்பதிவு அலுவலங்களில் டோக்கன் முறை அமல் - 30 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்யும் வசதி

    அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் 30 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து குறிப்பிட்ட நேரத்தில் பத்திரங்களை பதிவு செய்யும் டோக்கன் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. #RegistrationOffice
    சென்னை:

    பத்திரப்பதிவு அலுவலகங்களில் மக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் தற்போது பல்வேறு நடைமுறைகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

    அதன்படி சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சென்று பத்திரப்பதிவுக்கு இனிமேல் காத்திருக்க தேவையில்லை. முன்கூட்டியே 30 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்து டோக்கன் பெற்று கொள்ளலாம்.

    அதில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் சென்று பதிவு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகங்களிலும் தினசரி 50 டோக்கன் கொடுக்கப்படும்.

    காலை 10 மணி முதல் 1 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்துக்கும் தலா 10 டோக்கன் வீதம் 30 டோக்கன் அளிக்கப்படும்.

    பிற்பகல் 1 முதல் 1.30 மணி வரை 5 டோக்கனும், மதியம் 2 மணி முதல் 3 மணி வரை 10 டோக்கனும், மதியம் 3.30 மணி வரை 5 டோக்கன் என பிரித்து வழங்கப்படும்.

    இதில் உள்ள நேரத்தில் சென்று பத்திரங்களை பதிவு செய்யலாம்.

    முன்பதிவு செய்தவர்கள் குறித்த நேரத்தில் வரவில்லை என்றால் அந்த விவரம் அங்குள்ள கம்ப்யூட்டரில் காண்பிக்கப்படும். அதன் பிறகுதான் அடுத்த ஆவண பதிவை தொடர முடியும். இதற்கேற்ப கம்ப்யூட்டரில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    குறிப்பிட்ட நாட்களில் அனைத்து முன்பதிவு டோக்கன்களுக்கும் உரிய பதிவு நடைமுறை விரைவாக முடிந்துவிட்டால் அடுத்த நாளில் முன்பதிவுக்கு கொடுக்கப்பட்ட டோக்கன்களை வரவழைத்து பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #RegistrationOffice
    Next Story
    ×