என் மலர்
செய்திகள்

போடி வட்டார பகுதியில் பயறு வகைகள் விலை கடும் வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
போடி வட்டார பகுதியில் பயறு வகைகள் கடும் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி, தேவாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான மானாவாரி நிலங்கள் உள்ளன. தற்போது தென்மேற்கு பருவமழை ஓரளவு பெய்ததால் இதனை வைத்து மானாவாரியாக மிளகாய், வெங்காயம், தட்டைப்பயிறு, பீன்ஸ் போன்றவை சாகுபடி செய்தனர்.
தற்போது இவை அறுவடை செய்யப்பட்டு வருகிறது. நல்ல விலை கிடைக்கும் என்றும் விவசாயிகள் ஆர்வத்துடன் அறுவடை செய்கிறார்கள். ஆனால் அதனை விற்பனை செய்யும் போது விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், உரம், மருந்து, வேலை ஆட்களுக்கு வழங்கப்படும் கூலிக்கு கூட லாபம் இல்லை. எனவே அரசு இவைகளுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றனர்.
Next Story






