என் மலர்

  செய்திகள்

  சிறுமி கற்பழிப்பு வழக்கு - கைதான 17 பேருக்கும் காவல் நீட்டிப்பு
  X

  சிறுமி கற்பழிப்பு வழக்கு - கைதான 17 பேருக்கும் காவல் நீட்டிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அயனாவரம் சிறுமி கற்பழிப்பு வழக்கில் கைதான 17 பேரின் காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அடுத்த மாதம் 7-ந் தேதி வரை காவலை நீட்டித்து சென்னை மகளிர் கோர்ட்டு நீதிபதி மஞ்சுளா உத்தரவு பிறப்பித்தார். #ChennaiGirlHarassment #POCSOAct
  சென்னை:

  சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7-ம் வகுப்பு படித்து வரும் 11 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டராக வேலை பார்த்த ரவிக்குமார், காவலாளிகள் அபிஷேக், சுகுமாறன் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

  இவர்களின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் காணொலி காட்சி மூலம் அடுத்த மாதம் 7-ந் தேதி வரை காவலை நீட்டித்து சென்னை மகளிர் கோர்ட்டு நீதிபதி மஞ்சுளா நேற்று உத்தரவு பிறப்பித்தார். 17 பேரையும் முதல் முறையாக கோர்ட்டில் ஆஜர்படுத்தியபோது அவர்களை வக்கீல்கள் சரமாரியாக தாக்கினர். இதன் காரணமாக அவர்களின் காவல் நீட்டிப்பு நேற்று காணொலி காட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.  #ChennaiGirlHarassment #POCSOAct
  Next Story
  ×