search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு மாநகர் பகுதியில்  வளர்ச்சி திட்டப்பணிகள் எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்
    X

    ஈரோடு மாநகர் பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகள் எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்

    பள்ளியில் புதிய வகுப்பறையை எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டு புதிய வகுப்பறையை திறந்து வைத்தனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் உள்ள கல்வி நிறுவனத்தின் நடுநிலைப்பள்ளியில் கூடுதலாக 4 வகுப்பறைகள் ரூ.22 லட்சம் மதிப்பில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்டுள்ளது.

    இதற்கான திறப்பு விழா இன்று நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டு புதிய வகுப்பறையை திறந்து வைத்தனர்.

    நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், சூரம்பட்டி ஜெகதீஷ், கேசவமூர்த்தி, ஜெயராஜ், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் தெய்வநாயகம், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் டி.எஸ்.ஆர். செந்தில்ராஜன், டி.எஸ்.ஆர். ராஜ்கிரண், ஜீவா ரவி, பொன்.சேர்மன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதைத்தொடர்ந்து ஈரோடு மேட்டூர் ரோடு மற்றும் சத்தி ரோட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான தரைமட்டப்பாலம் அமைப்பதற்கான பூமி பூஜையை எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்.

    பின்னர் கருங்கல்பாளையத்தில் ரூ.3 லட்சம் மதிப்பில் போர்வெல் அமைத்து பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகத்தை எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்.
    Next Story
    ×