என் மலர்
செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெறக்கோரி சி.ஐ.டி.யூ. ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி:
புதுவை சி.ஐ.டி.யூ. ஆட்டோ சங்கத்தின் சார்பில் காந்தி வீதி அமுதசுரபி அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க பொதுச்செயலாளர் சீனுவாசன் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் மது, மதிவாணன், பழனியப்பன், நூர்முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ. தலைவர் முருகன், பொருளாளர் ஆவடியப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும். பெட்ரோல், டீசலுக்கான வரியை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர வேண்டும். இன்சூரன்ஸ் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும்.
புதிய போக்குவரத்து சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும். அமைப்புச்சாரா நலச்சங்கத்தை நல வாரியமாக மாற்ற வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும்.
ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆன்லைன் மூலம்அனுமதி பெறும் முறையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.






